யூரோவுக்கு எதிராக அமெரிக்க டொலர் பாரியளவில் வீழ்ச்சி

PARIS TAMIL  PARIS TAMIL
யூரோவுக்கு எதிராக அமெரிக்க டொலர் பாரியளவில் வீழ்ச்சி

 உலகின் வலுவான நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டொலர் பாரிய சரிவினை சந்தித்து வருவதாக தரவுகள் வெளியாகி உள்ளன. 

 
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வலுவற்ற நாணய கொள்கையே இதற்கு பிரதான காரணம் என பொறியிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 
 
கடந்த நவம்பர் மாதம் முதல் அமெரிக்க டொலர் சரிவை சந்தித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக்கிய சுகாதார சீர்திருத்த சட்டமூலம் தோல்வியடைந்ததனை தொடர்ந்து அமெரிக்க நிதியச் செலவுகளின் ஊக்கத்திற்கான வாய்ப்புகள் தொடர்பில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்துள்ளமை இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. 
 
சர்ச்சைக்குரிய நிலையில் வெற்றியை பெற்ற ட்ரம்பினால் கொண்டு வரப்பட்ட சட்டமூலம் தோல்வியடைந்துள்ளது. இது ட்ரம்பின் இயலாமையை காட்டுவதாகவும், குடியரசு தலைவர் ஒருவர் பெரிய பின்னடைவு சந்தித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
ட்ரம்பின் "Trumpflation" என்ற பணவீக்கம் அதிகரிக்கும் வர்த்தகத்தின் மீது கொண்ட நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமான டொலர் பெறுமதி கடந்த ஜனவரி மாதம் அதிகரிப்பை காட்டியது. 
 
எனினும் தற்போது இந்த சட்டமூலம் தோல்வியடைந்த பின்னர் டொலரின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் யென்னுக்கு எதிராக 110.09 மேற்பட்ட சதவீதம் டொலரின் பெறுமதி சரிந்துள்ளது. சுவிஸ் பிராங்கிற்கு எதிராக மிக குறைந்த சரிவு வீதத்தையே டொலர் பதிவு செய்துள்ளது.
 
கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை யூரோ 1,0904 வீத உயர்வை காட்டியுள்ளது. இந்த ஆண்டு டொலருக்கு எதிராக முக்கிய நாணயங்களின் ஸ்ரேலிங் பவுண்ட் மோசமான நிலையை எட்டியுள்ளது.
 
பிரித்தானிய பவுண்ட் பலவீனமான நிலைக்கு அருகிலேயே உள்ளது. பிரித்தானியாவுக்கு வெளியே பவுண்ட் நல்ல தரவை காட்டுகின்ற நிலையில் பவுண்டில் சில தலை கீழான நிலைகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
முக்கிய முக்கிய நாணயங்களுக்கு எதிராக 0.65 வீத சரிவை டொலர் பதிவு செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல், 98.858 என்ற அளவில் டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
 

மூலக்கதை