ஆஸி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆஸி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு!

 அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷோன் டைட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 
இவர் கடந்த வருடம் ஆரம்பத்தில் இந்தியாவுடன் நடைபெற்ற இருபதுக்கு-20 போட்டியில் கலந்துக்கொண்டமையே இவரின் இறுதி சர்வதேச போட்டியாக அமைந்திருந்தது.
 
எவ்வாறாயினும் 2016-2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிக் பாஸ் தொடரில் இவர் ஹொபார்ட்ஸ் ஹரிக்கேன்ஸ் அணிக்காக விளையாடினார்.
 
34 வயதாகும் ஷோன் டைட் மிக வேகமாக பந்துவீசக்கூடியவர். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் நடைபெற்ற போட்டியில் மணிக்கு சுமார் 161.1 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசியுள்ளார்.
 
ஷோன் டைட் 3 டெஸ்ட், 35 ஒருநாள் போட்டி மற்றும் 21 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இதில் முறையே 5, 62 மற்றும் 28 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை