விராட் கோஹ்லி மீது பிராட் ஹோட்ஜ் பாய்ச்சல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விராட் கோஹ்லி மீது பிராட் ஹோட்ஜ் பாய்ச்சல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்டின்போது, இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தோள்பட்டையில் காயமடைந்தார். இதனால் தர்மசாலாவில் தற்போது நடந்து வரும் 4வது டெஸ்டில் அவர் விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இதனிடையே ஐபிஎல் டி20 தொடர் வரும் ஏப்ரல் 5ம் தேதி தொடங்கவுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, அதற்குள் உடல் தகுதி பெற முயன்று வருகிறார். ஆனால் இந்தியாவுக்காக விளையாடாமல், ஐபிஎல் தொடரில் விளையாட வந்தால் விராட் கோஹ்லி மோசமானவர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளருமான பிராட் ஹோட்ஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள குஜராத் லயன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்குள் விராட் கோஹ்லியால் உடல் தகுதி பெற முடியாது என்றும், அந்த போட்டியில் விராட் கோஹ்லி விளையாட மாட்டார் என்றும் பிராட் ஹோட்ஜ் தெரிவித்துள்ளார்.  

.

மூலக்கதை