வெ.இண்டீசுடன் முதல் டி.20: பாகிஸ்தான் எளிதான வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெ.இண்டீசுடன் முதல் டி.20: பாகிஸ்தான் எளிதான வெற்றி

பார்படாஸ்: பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே முதல் டி. 20 போட்டி நேற்று இரவு நடந்தது.

டாஸ் வென்ற பாக். பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 111 ரன் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் பிராத்வெய்ட் ஆட்டம் இழக்காமல் 34 ரன் அடித்தார்.

வால்டன் 18, பொல்லார்ட் 14, ஹோல்டர் 14 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சதாப் கான் 4 ஓவரில் 7 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.

எளிதான இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான்  அணியின் துவக்க வீரர்கள் கம்ரன் அக்மல் 22, அகமது சேஷாத் 13 ரன்னில் ஆட்டம் இழக்க பாபர் அஸாம் 29 ரன் அடித்தார். 17. 1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 115 ரன் அடித்த பாகிஸ்தான், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சோயிப் மாலிக் 38 ரன்னுடன் களத்தில் இருந்தார். 3விக்கெட் எடுத்த பாக்.

சுழல் சதாப்கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

4 போட்டிகள் கொண்ட தொடரின் அடுத்த ஆட்டம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.

.

மூலக்கதை