கந்துவட்டி டார்ச்சரில் புதுமுக ஹீரோயின்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கந்துவட்டி டார்ச்சரில் புதுமுக ஹீரோயின்

கோலிவுட்டில் பேய் சீசன் படங்கள் குறைந்து சமூக வலைதளங்கள் பற்றிய கதை வளைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே கந்துவட்டி கதையை ‘வதம்’ என்ற பெயரில் படமாக்குகிறார் இயக்குனர் என். எஸ். அருள்செல்வம்.

இதுபற்றி அவர் கூறியது: அரசியல் பின்புலத்துடன் கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து நடத்தும் கும்பலால் பலர் டார்ச்சர் அனுபவிக்கின்றனர். அவர்களின் பிடியில் சிக்கியவர்கள் எப்படி மீட்கப்படுகிறார்கள் என்பது கதை.

பிரவீன், வின்ஸ்லி ஹீரோக்களாக நடிக்க புதுமுகம் சுவப்னா ஹீரோயினாக அறிமுகமாகிறார். பாலாசிங்.

ராஜேந்திரநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விபிஎம். எல். வின்ஸ்லி, தயாரிக்கிறார்.

இளையராஜாவின் சகோதரி மகன் ரவி விஜய்ஆனந்த் இசை அமைக்கிறார். ஹார்முக் ஒளிப்பதிவு.

திருநெல்வேலி, வடக்கன்குளம், வள்ளியூரில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சமீபத்தில் இதன் பாடல், டிரெய்லர் வெளியிடப்பட்டது.

எஸ். ஏ. சந்திரசேகர், கேயார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

.

மூலக்கதை