லோக்சபா தேர்தலில் பாஜவை தோற்கடிக்க முலாயம்-மாயாவதி கூட்டணி அமைக்க வேண்டும்: லாலு வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
லோக்சபா தேர்தலில் பாஜவை தோற்கடிக்க முலாயம்மாயாவதி கூட்டணி அமைக்க வேண்டும்: லாலு வலியுறுத்தல்

பாட்னா- பாஜவை தோற்கடிக்க முலாயம்- மாயாவதி உள்ளிட்டோர் கூட்டணி அமைக்க வேண்டும் என லாலு பிரசாத் வலியுறுத்தியுள்ளார். பீகாரில் ஆளும் கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி கட்சி தலைவர் லாலு பிரசாத் நேற்று பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், உத்தரபிரதேசத்தில் வருகிற லோக்சபா தேர்தலில் பாஜவை முறியடிக்க முலாயம், மாயாவதி உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் ஒரே அணியில் திரள வேண்டும். பீகாரில் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்.

அதே போல் பிற மாநிலங்களிலும் மற்ற மத சார்பற்ற கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் பாஜ தோற்பது உறுதி. பிறகு வளர்ச்சி என்ற பெயரில் பாஜவால் எதுவும் பேச முடியாது.

அவர்கள் ஆட்டத்தை நிறுத்தி விடலாம்.

பாஜ தலைையிலான மத்திய அரசு இட ஒதுக்கீட்டை ஒழித்து கட்ட முயற்சிக்கிறது.

எனவே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆர்ஜேடி கட்சி சார்பில் மத்திய அரசை வலியுறுத்த உள்ளோம். போதி கயாவில்  நடைபெற உள்ள 3 நாள் கட்சி பயிற்சி பட்டறையில் பாஜவின் தகிடுதத்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

அதே போல் தனது டுவிட்டரில் லாலு கூறுகையில், உத்தரபிரதேசத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் தனது அலுவலகத்தை புனித நீரால் சுத்தப்படுத்தும் சடங்கை நடத்தியுள்ளார். இது முந்தைய முதல்வரை அவமதிக்கும் செயலாகும்.

அவரது நடவடிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது என்றும் தாக்கினார்.

.

மூலக்கதை