பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தன்னாட்சி மிக்க சிறப்பு அதிகாரம் - மத்திய அரசு ஒப்புதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தன்னாட்சி மிக்க சிறப்பு அதிகாரம்  மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி- பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தன்னாட்சி மிக்க அரசியல் சாசன அந்தஸ்துடன் கூடிய சிறப்பு அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு, அரசியல் சாசன அந்தஸ்து வழங்கி அதிகாரமிக்கதாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருந்தது.

அதை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதனால் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தை(என்சிபிசி) சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய கமிஷன்(என்சிஎஸ்இபிசி) என மாற்ற மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.



இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது நிறைவேறியதும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தன்னாட்சி மிக்க சிறப்பு அதிகாரம் வழங்கப்படும்.

இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்மன் அனுப்பி வரவழைக்கவும், விசாரித்து தண்டனை வழங்கவும் முடியும். ஏறக்குறைய நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரமாகும்.

மேலும் இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய பிரிவினரை சேர்க்க இயலும். ஆனால் பட்டியலில் இருந்து நீக்கும் அதிகாரம் கிடையாது.

புதிய ஆணையத்தில் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். ஜாட் இனத்தவர் தங்களை ஓபிசி பட்டியலில் சேர்க்கக் கோரி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை