ஆஸி.,யை சூறாவளி தாக்கும் : வெளியேறும் மக்கள்

தினமலர்  தினமலர்
ஆஸி.,யை சூறாவளி தாக்கும் : வெளியேறும் மக்கள்

சிட்னி : ஆஸ்திரெலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை கடும் சூறாவளி தாக்க உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
டெப்பி என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, குயின்ஸ்லாந்தை தாக்கும். இதனால் மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என புரூனே வானிலை மையம் எச்சரித்துள்ளது. 4 ம் நிலை புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் .புயல் காரணமாக மக்காய் நகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மின்சார சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்கள் பல இடங்களில் வேருடன் சாய்ந்துள்ளன,
புயல் சின்னம் மணிக்கு 10 கி.மீ., வேகத்திற்கு குயின்ஸ்லாந்தை நோக்கி தென் மேற்காக நகர்ந்து வருகிறது. புயல் எச்சரிக்கை காரணமாக மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இதுவரை 3,500 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ள நிலையில், மேலும் 2,000 பேரை வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புயல் அச்சம் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர்.

மூலக்கதை