விமானங்களை இரத்துச் செய்யும் எயார்பிரான்ஸ்!!

PARIS TAMIL  PARIS TAMIL
விமானங்களை இரத்துச் செய்யும் எயார்பிரான்ஸ்!!

குய்யானில் (Guyane) தொடர்ச்சியாக நிலவும் அரசியற் கலவரங்களை அடுத்து நாளை முழுமையான வேலை நிறுத்தம் மாகாணம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் Cayenne நோக்கிச் செல்லும் எயார் பிரான்ஸ் மற்றும் எயார் கரிபியன் ஆகியவற்றின் விமான சேவைகள் அனைத்தும் நாளை முதல் மறு அறிவிப்பு வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அங்கு விமான நிலையப் பணியாளர்கள் முழுமையான வேலை நிறுத்தத்தில் இருப்பதால் எமது சேவைகளைத் தொடர முடியாது உள்ளது என எயார் பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை