செல்போனில் பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் கேரள அமைச்சர் ராஜினாமா

தினகரன்  தினகரன்

திருவனந்தபுரம்: பெண்ணிடம் செல்போனில் மிகவும் ஆபாசமாக பேசியதாக எழுந்த  புகாரையடுத்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன்  பதவியை  ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் பினராய்  விஜயன் தலைமையிலான இடதுமுன்னணி அரசு கடந்த ஆண்டு பொறுப்பு ஏற்றது. இந்த  அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) சார்பில் எலத்தூர் தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற சசீந்திரன் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி  ஏற்றார். இந்நிலையில் அமைச்சர் சசீந்திரன் ஒரு பெண்ணிடம் தொலைபேசியில்  ஆபாசமாக பேசிய உரையாடலை ஒரு தனியார் மலையாள ெதாலைக்காட்சி நேற்று  வெளியிட்டது. அதில் சசீந்திரன் பெண்ணிடம் மிகவும் ஆபாசமாக அருவெறுக்கத்தக்க  வகையில் பேசியிருந்தார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து  அமைச்சரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட  எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து விசாரணை நடத்த பினராய்  விஜயன் உத்தரவிட்டார்.இந்நிலையில் சசீந்திரன் நேற்று மதியம்  கோழிக்கோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: நான் ஒரு பெண்ணிடம் போனில்  ஆபாசமாக பேசியதாக ஒரு ெதாலைக்காட்சியில் செய்தி வெளியானது. ஆனால் நான் எந்த  தவறும் செய்யவில்லை. இது ெதாடர்பாக எந்த அமைப்பு வேண்டுமானாலும் விசாரணை  நடத்தலாம். விசாரணை நடக்கும்போது நான் அமைச்சராக இருந்தால் விசாரணையை  பாதிக்கும் என்பதால் பதவியை ராஜினாமா செய்கிறேன். என் மீது  கூறப்பட்ட புகார் குறித்த உண்மையை கண்டறிய வேண்டும். நான் நிரபராதி என்பதை  நிரூபிப்பேன். பதவியை ராஜினாமா செய்ய முதல்வர் வலியுறுத்தவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் ராஜினாமா செய்வதாக அறிவித்தது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை