ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது தாக்குதல்

தினமலர்  தினமலர்

மெல்போர்ன்:கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர், லீ மாக்ஸ் ஜாய், 33. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள ஹோபர்டில், எட்டு ஆண்டாக வசித்து வருகிறார். நர்சிங் படித்து வரும் ஜாய், பகுதி நேரமாக, டாக்சி டிரைவராக வேலை பார்க்கிறார்.நேற்று முன்தினம், டாக்சி ஓட்டிவிட்டு, ஓட்டலுக்கு, காபி குடிக்கச் சென்றார். அங்கு ஓட்டல் ஊழியர் ஒருவருடன், ஒரு பெண் உள்பட ஐந்து பேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.லீ மாக்ஸ் ஜாயை பார்த்த அவர்கள், வாக்குவாதத்தை நிறுத்திவிட்டு, ஜாயை நோக்கி வந்தனர். 'கறுப்பு இந்தியனே, எங்கள் நாட்டை விட்டு வெளியேறு' என கூறி, ஆபாசமாக திட்டினர். இதைப்பார்த்த சிலர், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஓட்டலை விட்டு, ஐந்து பேரும் வெளியே சென்றனர்.காபி குடித்த பின், காரை எடுப்பதற்காக, ஜாய், வெளியே வந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த ஐந்து பேரும், ஜாயை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். காயம் அடைந்த ஜாய், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஜாய் கூறுகையில், ''அமெரிக்காவை போல், ஆஸ்திரேலியாவிலும் இன வெறி தாக்குதல் அதிகரித்துள்ளது. போலீசார் நடவடிக்கை எடுப்பர் என்ற நம்பிக்கை இல்லை. இந்த விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு, இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.

மூலக்கதை