இந்தியா வருகிறார் பித்யா தேவி

தினமலர்  தினமலர்

காத்மண்டு: நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.நேபாள நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பித்யா தேவி பண்டாரி, 55, கடந்த 2015ல் தேர்வு செய்யப்பட்டார். இவர், கடந்த ஆண்டு மே மாதம் அரசு முறை பயணமாக இந்தியா வர இருந்தார். ஆனால் சில காரணங்களால் பயணம் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் அடுத்த மாதம் 17ம் தேதி இந்தியாவுக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. டில்லி வரும் இவர், ஏப். 18ல் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது இந்தியா, நேபாளம் நாடுகளுக்கு இடையில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பின், உ.பி., செல்லும் இவர், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார்.இது, ஜனாதிபதியாக

பொறுப்பேற்ற பின், இவரது முதல் வெளிநாட்டு அரசு பயணம்.

மூலக்கதை