பாக்., மற்றும் வங்கதேசத்துடனான எல்லைகளை சீலிட முடிவு : ராஜ்நாத் சிங் தகவல்

தினகரன்  தினகரன்

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான எல்லைகளை சீலிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லை பகுதிகளில் ஊடுருவல் அதிகரித்திருப்பதாக கூறினார். ஒருபுறம் தீவிரவாதிகள் மறுபுறம் அகதிகள் ஊடுருவல் என இரண்டு வடிவங்களில் இந்தியாவுக்கு தலைவலி தொடருவதாக அவர் குறிப்பிட்டார். இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான எல்லைகளை சீலிட முடிவு செய்துள்ளதாக கூறினார். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும் என்றார். தேவைப்படும் இடங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். எல்லை பாதுகாப்பு விவகாரத்தில் சமரசத்திற்கே இடமில்லை என்ற அவர், நக்சல் தீவிரவாதங்கள் பரவியுள்ள இடங்களில், அந்தந்த மாநில அரசுக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக ராஜ்நாத் சி்ங் கூறினார்.

மூலக்கதை