நாட்டிலுள்ள அனைத்து செல்போன் சந்தாதாரர்களிடமும் ஆதார் எண் பெற அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்

டெல்லி: செல்போன் உபயோகிப்பவர்கள் தாங்கள் வைத்துள்ள சிம் கார்டு சார்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என, தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் விவரங்களை  வாக்காளர் அட்டைகளை பெற்று  சரிபார்த்தன. தீவிரவாதிகள் முறைகேடாக சிம்கார்டுகளை பெறுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இநிலையில் செல்போன்  பயன்படுத்துவோர் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை பெற்று சமர்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் நாட்டிலுள்ள 110 கோடி செல்போன் சந்தாதாரர்களிடமும் ஆதார் எண்ணை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குறு, இணையதளம் மற்றும் விளம்பரங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை