ஆஸி.,-க்கு எதிரான 4-வது டெஸ்ட் : முதல் இன்னிங்ஸில் இந்தியா 248/6

தினகரன்  தினகரன்

தர்மசாலா: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 248 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 52 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய வீரர் ராகுல் 60 ரன்களும், புஜாரா 57 ரன்களும், ரகானே 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். விருதிமான் சஹா 10 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மூலக்கதை