40 பொலிஸாரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை!

PARIS TAMIL  PARIS TAMIL
40 பொலிஸாரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை!

 தீவிரவாத அமைப்பினரால் சுமார் 40 பொலிஸாரின் தலைகள் துண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கொங்கோவில் இடம்பெற்றுள்ளது.

 
கொங்கோவில் காம்வினா சாபு தீவிரவாத அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே தொடர்ந்து கடும் மோதல் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் குறித்த தீவிரவாத அமைப்பினர் கொங்கோவின்  மத்திய பகுதியிலுள்ள கசாய் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு இராணுவத்தினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம், அந்த அமைப்பின் தலைவர் ஜீன்-பியரே பன்டியை சுட்டு கொண்டனர்.
 
குறித்த படுகொலைக்கு பதிலீடாக சிகாபா-கனங்கா பகுதிகளில், தேடுதல் பணியிலிருந்த 40 பொலிஸாரை கடத்தி அவர்களின் தலையை துண்டித்த,  தீவிரவாத அமைப்பினர் தமது பகையை தீர்த்துள்ளதாகவும், சகாய் பகுதியினரின் ஷிலுபா மொழி பேசிய 6 பொலிஸார் மாத்திரம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கடந்த ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து இதுவரை மாத்திரம்சுமார் 400 பேர், கசாய் மாகாணத்தில்  கொல்லப்பட்டுள்ளனர்.  குறித்த சம்பவத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோசப் கபிலா தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். 
 
அத்தோடு கசாய் பகுதியில் அதில் உள்நாட்டு போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள 10 பாரிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு குறித்த தீவிரவாத அமைப்பினர் அமெரிக்க மற்றும் சுவீடனை சேர்ந்த 2 ஐ.நா. நிபுணர்கள் மற்றும் 4 கொங்கோ பிரதிநிதிகளை கடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை