தம்பியை காப்பாற்றுவதற்காக 10 வயது சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல்!

PARIS TAMIL  PARIS TAMIL
தம்பியை காப்பாற்றுவதற்காக 10 வயது சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல்!

 அமெரிக்காவில் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தம்பியை மகிழ்விக்க ஓவியம் வரைந்து அதில் வரும் பணத்தை அவனுக்கு செலவழிக்கும் சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

 
அமெரிக்காவில் உள்ள லிங்காலன் கவுண்டியை சேர்ந்தவர் Haden Davis (10) இவரின் இளைய சகோதரர் Max .
 
Maxக்கு அரிய நரம்பு வியாதி உள்ளது. நாளுக்கு நாள் அவனின் வியாதி அதிகரித்து வருகிறது.
 
தன் தம்பி மகிழ்ச்சியாக இருக்க Haden ஒரு முடிவு செய்தார். அதன்ப்படி தன் வீட்டு வாசலில் டேபிள் போட்டு விதவிதமான ஓவியங்களை வரைந்து அதை விற்கிறார் Haden.
 
ஓவியம் விற்பதில் கிடைக்கும் பணத்தில் தன் தம்பி Maxக்கு விளையாட்டு பொம்மைகள் மற்றும் பிடித்தவைகளை வாங்கி தருகிறார்.
 
இது குறித்து Haden கூறுகையில், Maxக்கு வந்த வியாதியால் அவன் தன்னம்பிக்கை இழக்க கூடாது.
 
அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே என்னால் முடிந்ததை செய்கிறேன் என கூறியுள்ளார்.
 

மூலக்கதை