தீப்பிடித்து எரிந்த கனரக வாகனம்! - A1 சாலையில் விபரீதம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
தீப்பிடித்து எரிந்த கனரக வாகனம்!  A1 சாலையில் விபரீதம்!!

A1 சாலையில் சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் சாலை மூடப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது. 
 
நேற்று சனிக்கிழமை நண்பகலின் பின்னதாக, A1 சாலையில் சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்துள்ளது. வாகனம் தீப்பிடித்து எரிந்துகொண்டே கட்டுப்பாடு இல்லாமல் அங்கும் இங்குமாக செல்வதை பார்த்த ஏனைய வாகன சாரதிகள் உடனடியாக அவசர இலக்கத்துக்கு அழைத்து தகவல் தெரிவித்தனர். அதற்குள்ளாக வாகன சாரதி திறமையாக வாகனத்தின் வேகத்தைக் குறைத்து வீதியில் இருந்த மின் விளக்கு கம்பத்தில் மோதி வாகனத்தை நிறுத்தி, உயிர் தப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 
 
அதை தொடர்ந்து சாலையின் இரண்டு வழிகளும் மூடப்பட்டு, வாகனம் அப்புறப்படுத்தப்பட்டது. வீதியில் நீண்ட நேரம் கரும்புகை நிறைந்திருந்ததாக சாரதிகள் சிலர் தெரிவித்துள்ளனர். பரிசை நோக்கி வரும் வழியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மூலக்கதை