குட்டிச்சுவர் புஜாரா

தினகரன்  தினகரன்

என்னப்பா... இப்படி என்றவர்களிடம், ‘டெஸ்ட் பழக்கதோஷத்தில் இருந்து மீள முடியலை. அதான்..’ என்று அசடு வழிந்திருக்கிறார். ஒருநாள் போட்டியில் டெஸ்ட் மேட்ச் ஆடி ரசிகர்களை சோதித்த கவாஸ்கரை விட்டு விட்டார்கள். ஆனால் பாவம்... டெஸ்டில் அபாரமாக ஆடிய புஜாராவை போட்டு தாக்குகிறார்கள் நெட்டிசன்கள். ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது தெரிஞ்ச விஷயம்தான். அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 451 ரன் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன் எடுத்திருந்தது. முன்னிலையும் பெற வேண்டும். விக்கெட்டையும் இழக்கக்கூடாது என்ற இக்கட்டான நிலை இந்திய அணிக்கு. இந்த நேரத்தில்தான் 7வது விக்கெட்டுக்கு சாஹாவுடன் இணைந்து 199 ரன்கள் குவித்தார் புஜாரா. 688 நிமிடங்கள் (சுமார் 12 மணிநேரம்) களத்தில் நின்று, 525 பந்துகளை சமாளித்து ஆடி, 202 ரன் எடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா.‘கடைசி நேரத்தில் அடித்து விளையாடியதால் ஆட்டமிழந்தார். இல்லாவிட்டாமல் அதிக பந்துகளை ‘சாப்பிட்ட’ முதல் வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பார்’ என்று ஆரம்பித்து ‘நெட்டிசன்கள்’ இவரை ‘கலாய்ச்சிபை’ ஆக்கி விட்டனர். ஷேவ் செய்த முகம், தாடி வளர்ந்த புஜாரா முகத்தையும் போட்டு, ‘களமிறங்கியபோது... முதல் ரன் எடுத்தபோது’... என்று மீம்ஸ்கள் பறந்தன. கோஹ்லி போல, தோள்பட்டையில் வலி என்று கிண்டலடித்த மேக்ஸ்வெல்லின் செயலை கூட, ‘புஜாராவுக்கு பந்து வீசும் ஆஸி. பவுலர்களுக்கு கை வலிக்கப்போகிறது’ என்று ஆஸி. மீடியாக்களும் கிண்டலடிக்க துவங்கி விட்டன. சரி... உண்மையில் ‘கட்டை மன்னரா’ புஜாரா? இல்லை. டெஸ்ட் ேபாட்டியை அப்படித்தான் ஆட வேண்டும். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் ‘ஒன்-டவுன்’ வீரரின் பணி மிகவும் முக்கியமானது. இந்த இடத்தில் ராகுல் டிராவிட்டின் ஓய்வுக்கு பிறகு மிகவும் பொருந்தியவர் புஜாரா. டிராவிட்டை ‘சுவர்’ என்றவர்கள், இவரை ‘குட்டிச்சுவர்’ என்கிறார்கள்.ராஞ்சி டெஸ்டில் இவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 38.47. இதே போட்டியின் 2வது இன்னிங்சில் ஆஸி. வீரர்களின் ஸ்டிரைக் ரேட் தெரியுமா? ரென்ஷா 17.85, கேப்டன் ஸ்மித் 30.88, மார்ஷ் 26.90, ஹேண்ட்ஸ்கோம்ப் 36.00 மட்டுமே. இப்போது சொல்லுங்கள். இந்த போட்டியில் யார் ஆமை வேகத்தில் ஆடியது என்று? இந்திய அளவில் அதிக பந்துகளை (525) எதிர்கொண்ட வீரரில் புஜாரா முதலிடம் வகிக்கிறார். 2வது இடத்தில் ராகுல் டிராவிட் (495 பந்துகள்). 1964ல் இங்கிலாந்து வீரர் கென் பாரிங்டன் 624 பந்துகளை ஆஸி. அணிக்கு எதிராக சந்தித்துள்ளார். அதற்கு பிறகு புஜாரா மட்டுமே, 500 பந்துகளை சந்தித்திருக்கிறார். கிரீம் போலக், சச்சின், லட்சுமணுக்கு பிறகு, புஜாரா மட்டுமே ஆஸி. அணிக்கு எதிராக 2 முறை இரட்டை சதம் விளாசி உள்ளார். இதுவரை 47 டெஸ்டில் 3,741 ரன் (அதிகம் 206*, சராசரி 51.95, சதம் 11, அரை சதம் 14) விளாசியுள்ளார். முதல் தர போட்டிகளில் 11 முறை இரட்டை சதம் அடித்துள்ளார். நடப்பு 2016-17 சீசனில் மொத்தம் 2007 ரன்கள் குவித்து, சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் 2வது இடம் பிடித்துள்ளார். இருந்தும், அணியின் நலம் கருதி சில நேரங்களில் ‘நத்தை போல’ ஆட வேண்டிய கட்டாயம். இப்படி சுயநலமின்றி செயல்படுபவரை கிண்டலடிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. ஐபிஎல் ஏலத்தில் கூட இவரை எந்த ஒரு அணியும் கண்டுகொள்ளவில்லை. அது மட்டுமல்ல... டி 20, ஒரு நாள் போட்டிகான இந்திய அணியிலும்  தேர்வு செய்யப்படுவதில்லை என்பதுதான் இவரது துரதிர்ஷ்டம். கிரிக்கெட்டின் அடிப்படை தெரியாத ரசிகர்கள் குட்டிச்சுவர் என்று கிண்டலடித்தாலும், எதிரணியின் வெற்றியை தடுத்து நிறுத்தும் கெட்டிச்சுவர் என்தை புஜாரா சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தே வருகிறார்.

மூலக்கதை