‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை பின்பற்றினால்... நிறுவனங்களின் வருவாய் 27 சதவீதம் உயரும்

தினமலர்  தினமலர்
‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை பின்பற்றினால்... நிறுவனங்களின் வருவாய் 27 சதவீதம் உயரும்

புதுடில்லி : ‘சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், நவீன டிஜிட்­டல் தொழில்­நுட்ப வச­தி­களை பயன்­ப­டுத்­தி­னால், அவற்­றின் வரு­வாய், 27 சத­வீ­தம் உய­ரும்’ என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழி­லக கூட்­ட­மைப்­பான, அசோ­செம், ‘டிலாய்டி’ நிறு­வ­னத்­து­டன் இணைந்து, ‘டிஜிட்­டல் இந்­தியா: லட்­சம் கோடி டாலர் வாய்ப்­பு­களின் திற­வு­கோல்’ என்ற ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது.அதன் விப­ரம்:இந்­தி­யா­வில், சுல­ப­மாக தொழில் துவங்க, பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்றன.வர்த்­த­கத்­திற்­கான, ‘இபிஸ்’ வலை­த­ளம் அறி­மு­கம் உட்­பட, பல்­வேறு பிரி­வு ­களில், மின்­னணு நிர்­வாக நடை­மு­றை­கள் அம­லுக்கு வந்­துள்­ள­தால், தற்­போது, ஓர­ளவு எளி­தாக தொழில் துவங்க முடி­கிறது. இது, மேலும் சுல­ப­மா­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.டிஜிட்­டல் தொழில்­நுட்­பத்­திற்­கான, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் உள்­ள­தால், அவற்­றின் மூலம், நிறு­வ­னங்­கள், வர்த்­தக நடை­மு­றை­களை சுல­ப­மாக ஒருங்­கி­ணைக்க முடி­கிறது. அத­னால், புதிய பொருட்­களை சந்­தைப்­ப­டுத்­து­வ­தற்­கான செல­வும், நேர­மும் குறை­கிறது.குறிப்­பாக, ‘டெலி­பி­ர­சன்ஸ்’ எனப்­படும், காணொலி காட்சி வச­தியை பயன்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு, வர்த்­த­கம் சார்ந்த பய­ணச் செலவு, 20 சத­வீ­தம் குறை­கிறது. இதன் மூலம், உல­க­ள­வில், 10 லட்­சம் டன் அள­வி­லான கரி­ய­மில வாயு வெளி­யே­று­வது தடுக்­கப்­ப­டு­கிறது.மேலும், ‘கிள­வுட் ஸ்டோ­ரேஜ்’ எனப்­படும், மேகக் கணினி தொழில்­நுட்­பத்­தில், மின்­னணு ஆவ­ணங்­களை சேமிப்­ப­தன் மூலம், நிறு­வ­னங்­கள், காகி­தங்­க­ளுக்கு செல­வி­டு­வது குறை­கிறது.நவீன டிஜிட்­டல் தொழில்­நுட்ப வச­தி­கள், பணி­யா­ளர்­களின் பணிச்­சு­மையை குறைக்­கின்றன. அத­னால் மகிழ்ச்­சி­ய­டை­யும் பணி­யா­ளர்­கள், கூடு­தல் பணி­களை செய்­கின்­ற­னர். இது, நிறு­வ­னங்­களின் உற்­பத்தி திறனை உயர்த்த வழி­வ­குக்­கிறது. பாரம்­ப­ரிய வர்த்­தக நடை­மு­றையை விரும்­பும் பணி­யா­ளர்­களை விட, 8 மடங்கு அதிக பணி­யா­ளர்­கள், நவீன டிஜிட்­டல் வச­தி­யுள்ள நிறு­வ­னங்­களை விரும்­பு­கின்­ற­னர்.இத்­த­கைய அம்­சங்­களின் அடிப்­ப­டை­யில், வர்த்­த­கத்­தில் நவீன டிஜிட்­டல் தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­களின் வரு­வாய், 27 சத­வீ­தம் உய­ரும்; வேலை­வாய்ப்பு, 84 சத­வீ­தம் அதி­க­ரிக்­கும். சர்­வ­தேச சந்­தை­யில், நவீன டிஜிட்­டல் தொழில்­நுட்­பத்தை பின்­பற்­றும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களின் பங்கு, 65 சத­வீ­தம் உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

கிரா­மப்­புற பயன்­பாடுமத்­திய அரசு, டிஜிட்­டல் தொழில்­நுட்­பத்­திற்­கான, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த, பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது. குறிப்­பாக, ‘டிஜிட்­டல் இந்­தியா’ திட்­டம் மூலம், இணைய வச­தி­களை பர­வ­லாக்கி, கிரா­மப்­பு­றங்­க­ளி­லும், டிஜிட்­டல் பயன்­பாட்டை அதி­க­ரிப்­ப­தற்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்றன.

மூலக்கதை