முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட ரிலையன்சுக்கு ஓராண்டு தடை

தினமலர்  தினமலர்
முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட ரிலையன்சுக்கு ஓராண்டு தடை

புதுடில்லி : முகேஷ் அம்­பானி தலை­மை­யி­லான, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் மற்­றும் அதன், 12 துணை நிறு­வ­னங்­கள், முன்­பேர வர்த்­த­கத்­தில் ஈடு­பட, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ ஓராண்­டுக்கு தடை விதித்­துள்­ளது.அத்­து­டன், 440 கோடி ரூபாய் மற்­றும் 2007 நவ., முதல், தற்­போது வரை, அத்­தொ­கைக்­கான, 12 சத­வீத ஆண்டு வட்­டியை கணக்­கிட்டு வழங்­கு­மா­றும் உத்­த­ர­விட்டு உள்­ளது. வட்டி தொகையே, 500 கோடி ரூபாய்க்­கும் மேலாக இருக்­கும் என்­ப­தால், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், 1,000 கோடி ரூபாய் அள­விற்கு, ‘செபி’க்கு வழங்க வேண்­டி­யி­ருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.ரிலை­யன்ஸ் குழு­மத்­தின் ஓர் அங்­க­மாக, ரிலை­யன்ஸ் பெட்­ரோ­லி­யம் இருந்த போது, அதன் பங்­கு­கள் மீது, முன்­பேர சந்­தை­யில், முறை­கே­டாக பரி­வர்த்­தனை நடந்­துள்­ள­தாக கூறி, இத்­த­கைய நட­வ­டிக்­கையை, ‘செபி’ எடுத்­துள்­ளது. இத­னி­டையே, ‘செபி’யின் உத்­த­ரவை எதிர்த்து, மேல்­மு­றை­யீடு செய்ய உள்­ள­தாக, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னத்­தின் செய்தி தொடர்­பா­ளர் ஒரு­வர் தெரி­வித்து உள்­ளார்.

மூலக்கதை