‘உள்நாட்டு ரசாயன சந்தை 22,600 கோடி டாலராக உயரும்’

தினமலர்  தினமலர்
‘உள்நாட்டு ரசாயன சந்தை 22,600 கோடி டாலராக உயரும்’

மும்பை : ‘‘இந்­திய ரசா­யன சந்­தை­யின் மதிப்பு, 2020ல், 22,600 கோடி டால­ராக உய­ரும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்து உள்­ளார்.அவர், மேலும் கூறி­ய­தா­வது:கடந்த, 2015 நில­வ­ரப்­படி, சர்­வ­தேச ரசா­யன சந்­தை­யின் மதிப்பு, 4.30 லட்­சம் கோடி டால­ராக உள்­ளது. அதில், இந்­திய ரசா­யன சந்­தை­யின் மதிப்பு, 14,700 கோடி டாலர் என்ற அள­விற்கு உள்­ளது. இது, 2020ல், 22,600 கோடி டால­ராக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. கடந்த இரு நிதி­யாண்­டு­க­ளாக, ரசா­யன துறை­யின் ஏற்­று­மதி, மதிப்­பில் குறைந்­துள்ள போதி­லும், அள­வில் அதி­க­ரித்­துள்­ளது. 2014 – 15ம் நிதி­ ஆண்­டில், ரசா­யன ஏற்­று­மதி, 1,266 கோடி டால­ராக இருந்­தது; இது, 2015 – 16ம் நிதி­யாண்­டில், 7.8 சத­வீ­தம் சரி­வ­டைந்து, 1,167 கோடி டால­ராக குறைந்­துள்­ளது.அதே சம­யம், இதே காலத்­தில், அளவு அடிப்­ப­டை­யி­லான ரசா­யன ஏற்­று­மதி, 7.51 சத­வீ­தம் அதி­க­ரித்து, 52.9 லட்­சம் டன்­னில் இருந்து, 56.90 லட்­சம் டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது.ரசா­யன துறையை ஊக்­கு­விக்­கும் வகை­யில், வரும் நிதி­யாண்­டிற்­கான மத்­திய பட்­ஜெட்­டில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான வரி, 5 சத­வீ­தம் குறைக்­கப்­பட்டு உள்­ளது. அத்­து­டன், புதிய வர்த்­தக அடிப்­படை கட்­ட­மைப்பு ஏற்­று­மதி திட்­ட­மும், ரசா­யன ஏற்­று­ம­தி­யா­ளர்­களின் பரி­வர்த்­தனை செல­வு­களை குறைத்து, சர்­வ­தேச சந்­தை­யில் போட்­டியை சமா­ளிக்க உத­வும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை