இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியுடன் இணைந்து செயல்பட வங்கிகள் ஆர்வம்

தினமலர்  தினமலர்
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியுடன் இணைந்து செயல்பட வங்கிகள் ஆர்வம்

புதுடில்லி : மத்­திய தொலை தொடர்பு துறை அமைச்­சர் மனோஜ் சின்ஹா, பார்­லி­மென்­டில் கூறி­ய­தா­வது:தேசிய அஞ்­சல் துறை, இந்­தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற பெய­ரில், வரை­ய­றுக்­கப்­பட்ட வங்கி சேவையை துவக்­கி­யுள்­ளது.நாடு முழு­வ­தும் உள்ள, அஞ்­ச­லக கிளை­களில், இவ்­வங்கி சேவை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது. இதை­ய­டுத்து, ஏரா­ள­மான பொதுத் துறை வங்­கி­கள், தனி­யார் வங்­கி­கள், காப்­பீட்டு நிறு­வ­னங்­கள் ஆகி­யவை, இந்­தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் உடன் இணைந்து செயல்­பட விருப்­பம் தெரி­வித்­துள்ளன.இது குறித்து, அஞ்­சல் துறை பரி­சீ­லித்து வரு­கிறது. சாதா­ரண மக்­க­ளுக்கு கிடைக்­கும் நன்­மை­களை ஆராய்ந்து, அதன் பின்னே, விண்­ணப்­பித்த வங்­கி­கள், காப்­பீட்டு நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து செயல்­ப­டு­வது குறித்து முடிவு எடுக்­கப்­படும்.இந்­தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்­கின் கணினி ஒருங்­கி­ணைப்பு பணி­க­ளுக்கு, கடந்த ஆண்டு, ஒப்­பந்த புள்ளி கோரப்­பட்­டது. அதில், ஒரு நிறு­வ­னம் மட்­டுமே பங்­கேற்­றது. அத­னால், மீண்­டும், ஒப்­பந்த புள்ளி கோரப்­பட்­டது. இதை­ய­டுத்து, விண்­ணப்­பித்த இரு நிறு­வ­னங்­களின் ஒப்­பந்த புள்­ளி­கள், தற்­போது பரி­சீ­ல­னை­யில் உள்ளன.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை