ஜி.எஸ்.டி., அறிமுகத்துக்காக காத்திருக்கும் ஆப்பிள் நிறுவனம்

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., அறிமுகத்துக்காக காத்திருக்கும் ஆப்பிள் நிறுவனம்

புதுடில்லி : ‘‘சரக்கு மற்­றும் சேவை வரி அமல்­ப­டுத்­தும் வரை, ஆப்­பிள் நிறு­வ­னம், இந்­தி­யா­வில் தொழிற்­சாலை அமைக்க காத்­தி­ருக்க வேண்­டி­ய­தி­ருக்­கும்,’’ என, மத்­திய தொழில் மற்­றும் வர்த்­தக துறை அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்து உள்­ளார்.மொபைல் போன் தயா­ரிப்­பில் முன்­ன­ணி­யில் உள்ள, அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ஆப்­பிள் நிறு­வ­னத்­துக்கு, சீனா மற்­றும் பிரே­சில் நாடு­களில், தொழிற்­சா­லை­கள் உள்ளன. இந்­நி­று­வ­னம், இந்­தி­யா­வில் தொழிற்­சாலை துவங்­கு­வ­தற்கு, மத்­திய அர­சி­டம் இருந்து, வரிச்­ச­லுகை உள்­ளிட்ட பல்­வேறு சலு­கை­களை கேட்­டுள்­ளது. ஆனால், அந்த கோரிக்­கை­களை மத்­திய அரசு ஏற்­க­வில்லை.தொழிற்­சாலை அமைக்­கும் வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள், 30 சத­வீத உப­க­ர­ணங்­களை, உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளி­டம் கொள்­மு­தல் செய்ய வேண்­டும் என்ற விதி உள்­ளது. அதை தளர்த்­து­மாறு, ஆப்­பிள் விடுத்த கோரிக்­கை­யை­யும், மத்­திய அரசு நிரா­க­ரித்­துள்­ளது.இது குறித்து, மத்­திய அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் கூறி­ய­தா­வது:சரக்கு மற்­றும் சேவை வரி, விரை­வில் அம­லுக்கு வர உள்­ளது; அத­னால், வரிச்­ச­லுகை கோரும் ஆப்­பிள் நிறு­வ­னம், அது­வரை காத்­தி­ருக்­கும் என, தெரி­கிறது. வரிச்­ச­லுகை கோரி, அந்­நி­று­வ­னம் விடுத்த அனைத்து கோரிக்­கை­களும் ஏற்­கப்­ப­ட­வில்லை.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை