என்ன அது ‘சைனாமேன்’?

தினகரன்  தினகரன்

சைனாமேன்’ என்பது சுழல்பந்துவீச்சில் உள்ள ஒருவகையான பந்துவீச்சு முறையாகும். இது இடது கை பந்துவீச்சாளர்கள் மணிக்கட்டை  மடக்கி பந்துவீசும் முறையாகும். இவ்வாறு வீசப்படும் பந்துகள், ஆடுகளத்தில் பிட்ச் ஆன உடன் இடப்புறத்திலிருந்து வலது புறமாக சுழன்று  செல்லும். மற்றவகையான பந்துவீச்சு முறையை விட கடினமாக இருந்தாலும், அதிக சுழற்சியை கொடுக்கும். 1933ம் ஆண்டு வெஸ்ட்  இண்டீஸ் அணியில் சீன வம்சாவளி இடது கை சுழற்பந்துவீச்சாளர் எல்லிஸ் புஷ் அசோங் இடம் பெற்றிருந்தார். மணிக்கட்டை சுழற்றி இவர் வீசிய வித்தியாசமாக சுழலில், இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் வால்டர் ரோபின் ஆட்டமிழந்தார்.  அப்போது பேட்டியளித்த ரோபின், ‘சைனாமேன் சுழலில் வீழ்ந்துவிட்டேன்’ என்றார். அதிலிருந்து, ‘சைனாமேன்’ சுழல்பந்து வீச்சு என  அழைக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை