ராமர் பாலத்தை கட்டியது யார்? அக்டோபரில் துவங்குகிறது ஆய்வு

தினமலர்  தினமலர்
ராமர் பாலத்தை கட்டியது யார்? அக்டோபரில் துவங்குகிறது ஆய்வு

புதுடில்லி, : ராமேஸ்வரத்தில், 'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா
என்பதை கண்டறிய, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஐ.சி.எச்.ஆர்., எனப்படும், இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய தலைவர் சுதர்ஷன்
ராவ் கூறியதாவது:

'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய, ஐ.சி.எச்.ஆர்., திட்டமிட்டுஉள்ளது. வரும் அக்டோபர் முதல் நவம்பர் வரை, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டத்துக்கு நிதி தேவைப்பட்டால், மத்திய அரசை, ஐ.சி.எச்.ஆர்., அணுகும். இந்திய தொல்லியல் துறை, ஆராய்ச்சி நிபுணர்கள், பல்கலை மாணவர்கள், கடல் துறை நிபுணர்கள்,
விஞ்ஞானிகள், இந்த ஆய்வுத் திட்டத்தில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார். புராணங்களின்படி, இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய, வானர
படையினர், ராமர் பாலத்தை அமைத்ததாக கூறப்படுகிறது.

மூலக்கதை