ஒரு லட்சம் யூரோக்கள் பெறுமதியான மோதிரத்தைப் பறிகொடுத்த பெண்மணி

PARIS TAMIL  PARIS TAMIL
ஒரு லட்சம் யூரோக்கள் பெறுமதியான மோதிரத்தைப் பறிகொடுத்த பெண்மணி

அறுபது வயதுடைய பெண்மணி ஒருவரை தாக்கி ஒரு இலட்சம் யூரோக்கள் பெறுமதியான நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  
 
இச்சம்பவம் Yvelines இன் Versailles நகரில்  இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் அறியமுடிவதாவது, நேற்று வெள்ளிக்கிழமை இரவு, 60 வயதுடைய சுவிஸ்-அமெரிக்க குடியுரிமை கொண்ட பெண்மணி ஒருவரை மர்ம குழு ஒன்று தாக்கிவிட்டு 100,000 யூரோக்கள் மதிப்புள்ள மோதிரம் ஒன்றை திருடிச்சென்றுள்ளனர். 
 
இன்று சனிக்கிழமை காலை Trianon Palace பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து காவல்துறையினருக்கு பெண்மணி ஒருவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  அறைக்குள் நுழைந்த ஒரு சில ஆண்கள் மூர்க்கத்தனமாக என்னை தாக்கினார்கள் என அப்பெண்மணி தெரிவித்துள்ளார். பின்னர் ஒரு இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள அவரின் மோதிரம் ஒன்றை திருடிச்சென்றுள்ளதாகவும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். முதல்கட்ட விசாரணைகளில் குறித்த பெண்மணியின் அறைக்குள் சில மதுபான போத்தல்கள் கிடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 
 
மேலும் குறித்த பெண்மணியை அவரின் காலில் தாக்கியுள்ளதாகவும், என்னால் நடக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். முதல்கட்ட விசாரணைகளின் பின்னர், இது கொஞ்சம் குழப்பமான நிலை.. மேற்படி சம்பவம் உண்மையில் இடம்பெற்றுள்ளதா என விசாரித்துக்கொண்டு இருக்கின்றோம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மூலக்கதை