4ஜி இண்டர்நெட் சேவை: ரூ.1,600 கோடி, ஏர்டெல் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
4ஜி இண்டர்நெட் சேவை: ரூ.1,600 கோடி, ஏர்டெல் ...

ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையை விரிவுபடுத்தும் வகையில் புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளது.  


    இதற்கு முதல் படியாக டிகோனா டிஜிட்டல் சேவை நிறுவனத்தின் 4ஜி வர்த்தகப் பணிகளை வாங்கியுள்ளது.

இந்த பரிவர்த்தனையின் மதிப்பு ரூ. 1,600 கோடி எனக் கூறப்பட்டுள்ளது.  
  இதன்மூலமாக, இந்திய அளவில் 5 தொலைத்தொடர்பு வட்டங்களில் டிகோனா நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ள 4ஜி அலைக்கற்றை தொகுப்பை ஏர்டெல் இனி நிர்வகிக்க உள்ளது.
  மேலும், வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான 4ஜி சேவையை இதன் மூலம் வழங்க முடியும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  
  ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க, ஏர்டெல் நிறுவனம் பல புதிய வர்த்தக விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

.

மூலக்கதை