இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட்: ஆஸி., முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்

தினகரன்  தினகரன்

தர்மசாலா: தர்மசாலாவில் நடைபெற்று வரும்4 வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணி கேப்டன்  விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவிலை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 56 ரன்களும், கேப்டன் ஸ்மித் 111 ரன்களும், மேத்தீவ் வாட் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ்வ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி ரன் எடுக்காமல் இருந்தது. விஜய், ராகுல் ரன் கணக்கை துவங்காமல் களத்தில் உள்ளனர்.

மூலக்கதை