தமிழக சட்டப்பேரவையில் 6 மசோதாக்கள் நிறைவேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக சட்டப்பேரவையில் 6 மசோதாக்கள் நிறைவேற்றம்

சென்னை- மதுபானங்களுக்கான வாட் வரி உயர்வு உள்ளிட்ட 6 மசோதாக்கள் நேற்று பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மதுபானங்களுக்கான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) உயர்த்தும் மசோதா மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான வாட் வரியை உயர்த்தும் மசோதாக்கள் உள்ளிட்ட 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல், நேற்று நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் கட்டிட மேம்பாடு வளர்ச்சிக்காக வழங்கப்படும் அனுமதியை 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக நீட்டிப்பு செய்யும் மசோதா மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடனை மாநில அரசு ஏற்றுக்கொண்டதன் காரணமாக ஏற்படும் நிதிப் பற்றாக்குறைக்காக நிர்ணயிக்கப்பட்ட நிதி மேலாண்மை இலக்குகளை பராமரிப்பதற்கான கால அளவை நீட்டிப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா ஆகிய 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த 6 மசோதாக்களும் பேரவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. ஒத்திவைப்பு சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவர் செங்கோட்டையன் கொண்டுவந்தார்.

அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மறுதேதி குறிப்பிடாமல் பேரவையை சபாநாயகர் தனபால் ஒத்தி வைத்தார்.

6 நாட்கள் பரபரப்பாக நடந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

.

மூலக்கதை