சசிகுமாருக்கு வில்லனாகிறார் அர்ஜூன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சசிகுமாருக்கு வில்லனாகிறார் அர்ஜூன்

நல்லவர்களாக நடித்து வந்த ஹீரோக்கள் திடீரென்று தங்களது பாணியை மாற்றி வில்லத்தனம் கலந்த பாத்திரத்தில் நடிக்கின்றனர். அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு வேடங்களில் ஒரு வேடத்தை நெகடிவ் வேடமாக ஏற்றிருந்தார் விஜய்.

மங்காத்தா படத்தில் பணத்தை கொள்ளையடிக்கும் போலீஸ் அதிகாரியாக நெகடிவ் வேடம் ஏற்றார் அஜீத். சமீபத்தில் திரைக்கு வந்துள்ள கடுகு படத்தில் பரத் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார்.

தீவிரவாதிகளை பிடிக்கும் அதிகாரியாக பல படங்களில் நடித்த அர்ஜூன் இயக்குனர் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் வில்லனாக நடித்தார். மீண்டும் அவர் வில்லன் வேடம் ஏற்க உள்ளார்.

குட்டிப்புலி பட இயக்குனர் முத்தையா இயக்கும் கொடிவீரன் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார். இதில் சசிகுமாருக்கு வில்லனாக அர்ஜூன் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் அவரிடம் இயக்குனர் ஸ்கிரிப்ட்டை சொல்ல அது அர்ஜுனுக்கு பிடித்துவிட நடிக்க ஓ. கே சொல்லியிருக்கிறாராம்.

.

மூலக்கதை