நியூசி.யுடன் கடைசி டெஸ்ட்: தென்ஆப்ரிக்கா நிதான ஆட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நியூசி.யுடன் கடைசி டெஸ்ட்: தென்ஆப்ரிக்கா நிதான ஆட்டம்

ஹாமில்டன்: நியூசிலாந்து- தென்ஆப்ரிக்கா அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி டெஸ்ட் ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தெ. ஆ.

முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் குக் நீக்கப்பட்டு டிபிரய்ன் சேர்க்கப்பட்டார்.

நியூசிலாந்து அணியில் சவுத்திக்கு பதில் ஹென்றி களம் இறங்கினார். தென்ஆப்ரிக்க அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.   டிபிரய்ன்  ஹென்றி பந்தில் டக்அவுட் ஆனார்.

மற்றொரு வீரர் எல்கர் 5 ரன்னில் கிராண்ட்கோமே பந்தில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த டுமினி 20 ரன்னில் ஆட்டம் இழக்க 50 ரன் அடித்த அம்லா கிராண்ட் கோமே பந்தில் போல்டானார்.

41 ஓவரில் தென்ஆப்ரிக்க அணி 4 விக்கெட் இழந்து 123 ரன் எடுத்திருந்தது.


.

மூலக்கதை