மும்பை மாடல் அழகியை மணந்து இந்திய குடிமகன் அந்தஸ்து பெற்ற ஆஸி. கிரிக்கெட் வீரர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மும்பை மாடல் அழகியை மணந்து இந்திய குடிமகன் அந்தஸ்து பெற்ற ஆஸி. கிரிக்கெட் வீரர்

கான்பரா: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷான் டெய்ட். வேகப்பந்து வீச்சாளரான இவர், வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

இதனை அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் அட்டையின் புகைப்படத்தை அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஷான் டெய்ட், மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி மசூம் சிங்காவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அந்தஸ்து பெற்றுள்ள டெய்ட்,  இந்திய அணிக்காக 3 ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட் விளையாட முடியும். ஆனால் தற்போது டெய்ட்டுக்கு 35 வயது ஆவதால், விளையாட வாய்ப்பு கிடைக்காது.   ஆஸி.

அணிக்காக 3 டெஸ்ட், 35 ஒருநாள் மற்றும் 21 டி. 20 போட்டிகளில் விளையாடி உள்ள டெய்ட் , 2007ம் ஆண்டு ெடஸ்ட்டில் இருந்தும், 2011ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது டி. 20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.


.

மூலக்கதை