நவம்பர், டிசம்பர் மாதத்தில் இந்தியாவுடன் கிரிக்கெட் தொடர் நடத்த பாக். விருப்பம்: ஐசிசியிடம் முறையிட முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நவம்பர், டிசம்பர் மாதத்தில் இந்தியாவுடன் கிரிக்கெட் தொடர் நடத்த பாக். விருப்பம்: ஐசிசியிடம் முறையிட முடிவு

கராச்சி:  இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நீடிக்கும் பதற்றம் மற்றும் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல்கள் காரணமாக கடந்த 2008ம் ஆண்டு முதல், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவில்லை. ஐசிசி நடத்தும் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாததால், மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாக் கிரிக்கெட் வாரியம் கூறுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதத்தில், இரு நாடுகளிடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்திட வேண்டும் என்பதில் பாக் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார்கான் உறுதியாக உள்ளார். அடுத்த மாதம் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் இது தொடர்பாக அவர் வலியுறுத்துகிறார்.



மேலும், பிசிசிஐக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட குழுவினரிடமும் அவர் பேச உள்ளார். 2014ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் அதை இந்தியா மீறி விட்டதாக பாக் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டி வருகிறது.
 சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிபோட்டி லாகூரில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இருந்தபோதிலும், பிற நாடுகள் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்கு வீரர்களை அனுப்ப தயங்குகிறது. இதனாலும் எங்களுக்கு பின்னடைவு ஏற்படுகிறது என ஷகாரியார்கான் கூறியுள்ளார்.

வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பாகிஸ்தான் வரும் வங்காளதேசம் ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.   இதில் 2 டி-20 போட்டிகளை லாகூரில் நடத்த வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு பாக். வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறோம், தைரியமாக வாருங்கள் மற்ற நாடுகளிடம் பாக். கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


.

மூலக்கதை