வாக்கு பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு - தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாக்கு பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு  தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி- உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக வக்கீல் எம். எல். ஷர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தரத்தை சாப்ட்வேர் நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.

சமீபத்தில் தேர்தல்களில் நடந்த வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பாக மத்திய அரசு வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.



வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டன. ஏற்கனவே 5 மாநில தேர்தல்களில் பாஜவினர் ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்துதான் வெற்றி பெற்றனர் என மாயாவதி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வந்தனர்.

தற்போது இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.   2019 பொது தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்வதற்கு வசதி செய்யும் ரசீது முறையை அறிமுகம் செய்ய மத்திய அரசிடம்  ரூ. 3174 கோடியை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை