உத்தர பிரதேசத்தில் பரபரப்பு உயிருக்கு போராடிய பெண் அருகில் செல்பி எடுத்த 3 போலீசார் சஸ்பெண்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தர பிரதேசத்தில் பரபரப்பு உயிருக்கு போராடிய பெண் அருகில் செல்பி எடுத்த 3 போலீசார் சஸ்பெண்ட்

லக்னோ- ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணின் அருகே அமர்ந்து செல்பி எடுத்த 3 பெண் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் ரயிலில் சென்றபோது, ஒரு கும்பல் அந்த பெண்ணை தாக்கி வலுக்கட்டாயமாக ஆசிட்டை வாயில் ஊற்றி தாக்குதல் நடத்தியது. இதனால் அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

லக்னோவில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணை நேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவருக்கு நிதியுதவி வழங்கிய முதல்வர், குற்றவாளிகளை மீது பிடிக்க உத்தரவிட்டார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் இருந்து சென்ற நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 பெண் காவலர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகே அமர்ந்திருந்தனர்.



இந்நிலையில், 3 காவலர்களும் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணின் பின்னணியில் செல்பி எடுத்து கொண்டனர். இந்த புகைப்படங்களை அவர்கள் ஷேர் செய்த நிலையில், அது வைரலாக பரவியது.

உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் அருகில் போலீசார் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, 3 பெண் காவலர்களும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
முன்விரோதம் காரணமாக பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


.

மூலக்கதை