செயல்படாத அதிமுக அரசு - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
செயல்படாத அதிமுக அரசு  ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

அரியலூர்- தமாகா தலைவர் ஜி. கே. வாசன் அரியலூரில் அளித்த பேட்டி: கடும் வறட்சி நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. விவசாயிகள் தமிழகம் மட்டுமன்றி டெல்லியிலும் போராட்டம் நடத்துகின்றனர்.

வறட்சி நிவாரணமாக விவசாயிகள் ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் மத்திய அரசு வெறும் ரூ. 1,748 கோடியை ஒதுக்கி இருப்பது யானை பசிக்கு கிடைத்த சோளப்பொரிதான்.

ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் தமாகா எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி இருப்பது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை.

செயல்படாத அரசாகத்தான் அதிமுக அரசு உள்ளது. தமிழகத்தில் தற்போது சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு தலைவிரித்து ஆடுகிறது.

இவ்வாறு ஜி. கே. வாசன் கூறினார்.

.

மூலக்கதை