தமிழகத்தில் உக்கிரத்தை காட்ட துவங்கிய கோடை வெயில்

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் உக்கிரத்தை காட்ட துவங்கிய கோடை வெயில்

சென்னை : ஏப்ரல் மாதம் தொடங்கும் முன்பாகவே தமிழகத்தில் 3 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 101.84 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

கோடை வெயில் :


தமிழகத்தில் சில இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று, அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 101.84 டிகிரி வெயில் பதிவானது. சேலத்தில் 100.58 டிகிரி வெயிலும், வேலூரில் 100.04 டிகிரி வெயிலும் சுட்டெரித்தது. மற்ற மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் குறைவாகத்தான் இருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரியும், சென்னை விமான நிலையத்தில் 93 டிகிரி வெயிலும் அடித்தது. கொடைக்கானலில் 67 டிகிரியும், ஊட்டியில் 74 டிகிரியும் வெயில் பதிவானது.
இதனால் ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் அக்னி நட்சத்திர காலத்திலும் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க தமிழகம் முழுவதும் மின் தேவையும் அதிகரித்து வருகிறது.

மூலக்கதை