முன்னாள் எகிப்து அதிபர் விடுதலை

தினமலர்  தினமலர்
முன்னாள் எகிப்து அதிபர் விடுதலை

கெய்ரோ: ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்ற எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் ,88 வயது மூப்பு மற்றும் உடல் நலம் காரணமாக விடுவிக்கப்பட்டார்.

கடந்த 1981-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை எகிப்து அதிபராக இருந்தார் முபாரக். , எகிப்தில் திடீரென அரேபிய புரட்சி ஏற்பட்டதையடுத்து பதவி இழந்தார். இவர் மீது ஊழல், மற்றும் அரசு கெதிராக போராடியவர்களை கொலை செய்தது உள்ளிட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோர்ட் உத்தரவுப்படிஆயுள் தண்டனை பெற்றார். சிறையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

மூலக்கதை