துளித்துளியாய்.........

தினகரன்  தினகரன்

* அயர்லாந்து அணியுடன் நடந்த 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. * அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உள்ளூர் வீராங்கனை வார்வரா லெப்சென்கோவுடன் நேற்று மோதிய கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-1, 6-2 என்ற நேட் செட்களில் மிக எளிதாக வென்றார். * பிபா உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் (தென் அமெரிக்க பிரிவு), சிலி அணியுடன் மோதிய அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா கேப்டன் லயனல் மெஸ்ஸி கோல் அடித்தார். மற்றொரு தகுதிச் சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது. * ஐசிசி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த ஷஷாங்க் மனோகர், ஜூன் மாதம் நடைபெற உள்ள வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வரை தற்காலிகமாக பொறுப்பு வகிக்க சம்மதித்துள்ளார்.* விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கும் தியோதர் டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா நீலம் - இந்தியா சிவப்பு அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை