பூமியைக் காக்க ஒரு மணிநேரம் இருளில்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பூமியைக் காக்க ஒரு மணிநேரம் இருளில்!!

நாளை, பூமியின் சக்திமூலத்தைக் காப்பாற்றும் ஒரு மணிநேரத்தைக் கடைப்பிடிக்கும் ; «EARTH HOUR» கடைப்பிடிக்கும் தினமாகும். அனைவரையும், ஒரு மணிநேரம் மின்சார விளக்குகள், மற்றும், மின்சாரம் பயன்படுத்தும் உபகரணங்கள் அனைத்தையும் நிறுத்தி, நாளைய தலைமுறைக்கான புவியின் சக்தி மூலத்தைச் சேமிப்பதோடு, புவிவெப்பமயமாகல் மற்றும் புவி,வளிமண்டல மாசடைவைத் தடுக்கும் முயற்சியான «EARTH HOUR» இற்கு,  ஒவ்வொரு வருடமும் உலக வனப்பாதுகாப்பு நிதியமான WWF(World Wildlife Fund) கோரி வருகின்றது.
 
 
இதன் ஒரு பங்களிப்பு அடையாளமாக நாளை சனிக்கிழமை இரவு 20h30 இலிருநது, ஒரு மணிநேரத்திற்கு ஈபிள்கோபுரம் இருளில் மூழ்க உள்ளது. இந்த முயற்சியை எடுத்திருக்கும் பரிசின் மாநகரசபை, பரிஸ் வாழ் மக்கள் அனைவரையும் இந்தப் புவி மணித்தியாலத்தில் பங்கு கொள்ளுமாறு அழைத்துள்ளது.
WWF உலக மக்கள் அனைவரையும் கோரியுள்ளது.
 

மூலக்கதை