மரீன் லு பென்னுக்கு பணம் தர மறுத்த ரஷ்ய வங்கி

PARIS TAMIL  PARIS TAMIL
மரீன் லு பென்னுக்கு பணம் தர மறுத்த ரஷ்ய வங்கி

ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லூ பென் இன்று வெள்ளிக்கிழமை இரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin உடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். 
 
ஏப்ரல் 23 ஆம் திகதி பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல்ச்சுற்று இடம்பெற உள்ளது. தீவிர பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ள தேசிய முன்னணி கட்சியின் தலைவர் இன்று வெள்ளிக்கிழமை இரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin உடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். மோஸ்கோ நகரத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பே இருவருக்குமான முதல் சந்திப்பு என தெரிவிக்கபப்ட்டுள்ளது. 
 
இந்த சந்திப்பு வழக்கமான சந்திப்பு என்றும், இரஷ்யா இதுபோன்ற அரசியல் தலைவர்களை சந்திப்பது வழமையான செயல் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை பிரான்சின் உள்விவகாரங்களில் தற்போதைக்கு தலையிட விரும்பவில்லை எனவும் Vladimir Putin தெரிவித்ததாக அறியமுடிகிறது. அதைத்தொடர்ந்து மரீன்-லூ-பென்னுக்கு அதிகளவான வரவேற்பு கிடைத்துள்ளது என்றும், வேகமாக வளர்ந்துவரும் தீவிர வலது சாரி தலைவர் என்ற அடையாளமும் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டு இரஷ்ய வங்கி ஒன்றில் இருந்து 9.7 மில்லியன் யூரோக்கள் பணம் கடனாக பெற்றிருந்தார். அதை திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து மரீன்-லூ-பென்னுக்கு மீண்டும் எவ்வித கடன் உதவிகளும் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மரீன்-லூ-பென்னுக்கும் Vladimir Putin க்கும் இடையே நல்லுறவு ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை