கல்யாண மூடில் கங்கனா

தமிழ் முரசு  தமிழ் முரசு
கல்யாண மூடில் கங்கனா

சினிமாவில் மட்டுமல்லாமல் இணைய தளங்களிலும் அரை குறை ஆடை, டாப்லெஸ் என்ட்ரி, லோகட் பேன்ட் என நடிகைகள் போட்டிபோட்டு கலக்கிக்கொண்டிருக்கின்றனர். விமான பயணங்களின்போது டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் என்று சிம்ப்ளாக வருவதுண்டு.

அந்த உடைதான் வசதியாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இதே பாணியைத்தான் நடிகை கங்கனா ரனாவத்தும் பின்பற்றி வந்தார்.

சமீபத்தில் கங்கனா, விமான நிலையத்துக்கு வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள், ரசிகர்கள் இது கங்கனாவா என வியப்பில் ஆழ்ந்தனர். கேரளா பாணியிலான ஓணம் சேலைபோல் சந்தன நிறத்தில் பட்டு ஜரிகை வேய்ந்த சேலை அணிந்திருந்தார்.

அதே நிறத்தில் ஸ்லீவ் லெஸ் பிளவுசும் அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தார். இந்த பாணி பாலிவுட் இளம் ஹீரோயின்கள் மத்தியில் புது டிரெண்டாக தென்பட்டதாக தெரிவித்தனர்.

சமீபகாலமாக கங்கனாவின் நடவடிக்கையில் சிறு சிறு மாற்றங்கள் தெரிவதையடுத்து அவர் திருமண மூடுக்கு வந்திருப்பதாக திரையுலகினர் முணுமுணுக்குகின்றனர்.

.

மூலக்கதை