அன்பளிப்பை தவறாக ஏற்றுக்கொண்டுவிட்டேன்! - குற்றச்சாட்டு குறித்து பியோன் ஆதங்கம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
அன்பளிப்பை தவறாக ஏற்றுக்கொண்டுவிட்டேன்!  குற்றச்சாட்டு குறித்து பியோன் ஆதங்கம்!!

நண்பன் அன்பளிப்பாக கொடுத்த ஆடம்பர ஆடைகளை தவறுதலாக பெற்றுக்கொண்டுவிட்டேன் என குற்றச்சாட்டு குறித்து பிரான்சுவா பியோன் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 
 
ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா பியோன், கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து ஆடம்பர ஆடைகளை அணிந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு, 48,500 யூரோக்கள் பெறுமதிமிக்க ஆடைகளுக்கான பின்னணி குறித்து புதிய விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் France 2 க்கு வழங்கிய நேர்காணலில், என்னுடைய பால்ய நண்பன் Robert Bourgi எனக்கு அன்பளிப்பாக வழங்கியது. அதை நான் ஏற்க மறுத்திருக்கவேண்டும். என குறிப்பிட்டுள்ளார். 
 
பிரெஞ்சு தேசிய நிதி அலுவலக அதிகாரிகள் இந்த வழக்கை எடுத்துக்கொண்டு, சிறப்பு நீதிபதிகள் மூவரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா பியோன். இந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பியோனின் அரசியல் செல்வாக்கு கணிசமாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை