ஜெயலலிதா சமாதிக்கு சென்றால் பதவி இழப்பு?

தினமலர்  தினமலர்
ஜெயலலிதா சமாதிக்கு சென்றால் பதவி இழப்பு?

'ஜெ., சமாதிக்கு சென்று வணங்கினால், ஏதாவது ஒன்றை பறிகொடுக்க நேரிடும்' என, சமூக வலைதளங்களில் பரவும் தகவலால், அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சென்னை, மெரினாவில் உள்ள, ஜெ., சமாதிக்கு சென்று வணங்கிய பின், பழனிசாமியிடம் முதல்வர் பதவியை பறிகொடுத்தார். அடுத்து, ஜெ., சமாதிக்கு சென்ற சசிகலா, சட்டசபை குழு தலைவராக, அதாவது, முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஆவணத்தை, சமாதியில் வைத்து வணங்கினார். அதோடு நேராக, ஜெயிலுக்கு தான் சென்றார். ஜெ., சமாதிக்கு சென்று வணங்கிய தினகரன், இரட்டை இலை சின்னத்தை இழந்தார். சமாதியில் வலம் வந்து வணங்கிய தீபா, கணவர் மாதவனை பிரிந்தார்.

இப்படி, ஜெ., சமாதியை வணங்கிய ஒவ்வொருவரும், அடுத்தடுத்து ஒன்றை இழப்பதற்கு காரணம், தனக்கு துரோகம் செய்தவர்கள், வேஷம் போடுவதை சகிக்க முடியாத, ஜெ.,யின் ஆவி தான், பழி வாங்கி வருவதாக, சமூக வலைதளங்களில், 'கமென்ட்' பரவி வருகிறது. இதை பார்க்கும், அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.

- நமது நிருபர் -

மூலக்கதை