பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் ஜோஷ்னா முன்னேற்றம்

தினகரன்  தினகரன்

லண்டன் : பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் மகளிர் பிரிவில், இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 2வது சுற்றுக்கு முன்னேறினார்.முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் ரச்சேல் கிரின்ஹாமுடன் நேற்று மோதிய ஜோஷ்னா 11-6, 8-11, 11-6, 12-10 என்ற கணக்கில் வென்றார். இதே தொடரில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீராங்கனை தீபிகா பாலிகல் 4-11, 5-11, 13-11, 11-1 என்ற கணக்கில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 7-11, 4-11, 4-11 என ஸ்காட்லாந்தின் ஆலன் கிளைனிடம் வீழ்ந்தார்.

மூலக்கதை