போர் குற்றம் குறித்து விசாரிக்க இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் : இந்தியா மவுனம்

தினகரன்  தினகரன்

ஜெனீவா: தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளது. இலங்கைக்கு அவகாசம் வழங்கியதற்கு 40 நாடுகள் ஆதரவு அளித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கானா மட்டும் கால அவகாசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் கால அவகாசம் குறித்து இந்திய கருத்து தெரிவிக்கவில்லை. ஐ.நா. போர்க்குற்ற விசாரணையை நடத்த இலங்கைக்கு கூடுதல் அவகாசம் வழங்குவது அநீதியானது என்று ஐ.நா. கூட்டத்தில் இயக்குநர் கவுதமன் பேசினார். போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கைக்கு ஐ.நா அமைப்பு ஏற்கனவே 2 ஆண்டு அவகாசம் கொடுத்துள்ளது. இலங்கை மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. 2 ஆண்டுகளாக போர் குற்றம் குறித்து எந்த விசாரணையையும் இலங்கை அரசு நடத்தவில்லை என்றும், இலங்கைக்கு மேலும் அவகாசம் தருவது தமிழர்களை அழிக்க காரணமாகிவிடும் என்று கவுதமன் தெரிவித்தார். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஐ.நா. கூட்டத்தில் மவுனம் காத்ததற்கும் கவுதமன் கண்டனம் தெரிவித்தார்.

மூலக்கதை