சசி அணிக்கு தொப்பி , ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை மின்கம்பம்

தினமலர்  தினமலர்
சசி அணிக்கு தொப்பி , ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை மின்கம்பம்

புதுடில்லி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னமும், ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை மின்கம்பமும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. கட்சியின் பெயரையும் பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும், புதிய கட்சி மற்றும் சின்னத்தின் பட்டியலை இன்று சமர்ப்பிக்கும்படி இரு தரப்புக்கும் உத்தரவிட்டது. இதனையடுத்து, இரு தரப்பினரும், 3 கட்சி பெயர்கள் , 3 சின்னங்கள் கொண்ட பட்டியலை டில்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர்.

சசிகலா தரப்பில், கட்சி பெயராக அதிமுக (அம்மா), எனவும் சின்னமாக கிரிக்கெட் பேட், ஆட்டோ, தொப்பி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு கேட்டது. சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.


ஓ.பி.எஸ்., தரப்பு, அதிமுக புரட்சித்தலைவி அம்மா, என்றும், சசிகலா தரப்பு அதிமுக அம்மா எனவும் அழைக்கப்படும்.



மூலக்கதை