நடிப்பதை குறைத்தார் நித்யா - விரைவில் படம் இயக்குகிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிப்பதை குறைத்தார் நித்யா  விரைவில் படம் இயக்குகிறார்

ஓகே கண்மணி, மறுமுகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நித்யா மேனன். சமீபகாலமாக நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறார்.

சாவித்ரி வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க அவருக்கு வந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு சென்றது. நித்யாமேனன் புதிய படங்களை ஒப்புக்கொள்ள மறுப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது, ‘நடிக்க வருவதற்கு முன்பே இயக்குனர் ஆகும் ஆசை நித்யாவுக்கு இருந்தது.

தனிப்பட்ட முறையில் ஸ்கிரிப்ட் தயாரித்து வந்தார். தற்போது 2 ஸ்கிரிப்ட் ரெடி செய்துள்ளார்.

தெலுங்கு, மலையாளத்தில் அப்படங்களை இயக்க திட்டமிட்டிருக்கிறார். ஒரு ஸ்கிரிப்ட்டை படமாக தயாரிக்க தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறாராம்.

இதையடுத்து அவர் நடிப்புக்கு சில காலம் ஓய்வு கொடுத்து இயக்குனர் பொறுப்பு ஏற்க உள்ளார். நடிப்பதை குறைத்துவிட்டார்.

அதுபற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்’ என்றனர். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி இயக்குனராக படம் இயக்கி உள்ளார்.

தற்போது நடிகை ஸ்ரீரியா, ரேவதி இயக்குனர்களாக அவ்வப்போது படங்களை இயக்குகின்றனர்.

அந்த பட்டியலில் நித்யா மேனனும் விரைவில் இணைய உள்ளார்.

.

மூலக்கதை