‘கம்ப்ளீட் மென்ட்டல்’பூர்ணா ஷாக் மெசேஜ் 'Complete Shock messaging menttalpurna

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘கம்ப்ளீட் மென்ட்டல்’பூர்ணா ஷாக் மெசேஜ் Complete Shock messaging menttalpurna

தமிழ் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் கடந்த ஆண்டு மணல்கயிறு 2ம் பாகத்தில் நடித்தார் பூர்ணா. தமிழில் இல்லாவிட்டாலும் தெலுங்கு, மலையாளம் என்று ஏதாவது ஒரு மொழியில் ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டிக்கொண்டிருப்பார்.

2017 புத்தாண்டு தொடங்கி 3 மாதம் ஆகியும் இதுவரை புதிய படம் எதுவும் வராததால் அப்செட் ஆகியிருக்கிறார். இடைவெளியை நிரப்புவதற்காக நட்சத்திர ஸ்டேஜ் ஷோக்களில் நடனம் ஆடுகிறார்.

ரிகர்சல், நிகழ்ச்சி நேரம் போக இணைய தள டுவிட்டர் பக்கத்தில் கவனத்தை திருப்பி இருக்கிறார். சமீபத்தில் அவர் 2 புகைப்படம் வெளியிட்டு மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.

உதட்டில் விரலை கடித்தபடி அப்பாவித்தனமாக பார்த்தபடி பதிவு செய்திருக்கும் புகைப்படத்துக்கு கீழ் சில சமயம் இப்படியிருந்தேன் ‘மென்டல்’ (பைத்தியம்) எனவும் மற்றொரு வீடியோவில் அறைக்குள் அமர்ந்து இந்தி பாடலை பாடியபடி, ‘இன்று நான் கம்ப்ளீட்லி மென்ட்டல்’ என பதிவிட்டிருக்கிறார்.

ஜாலிக்காக இப்படி அவர் டுவிட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை